என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்ட ரசிகரிடம் , வேண்டுமானால் முயற்ச்சித்து பாருங்களேன் என்றதுடன் ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும் நடிகை காஜல் அகர்வால் பதில் அளித்துள்ளார்.
இப்போதெல்லாம் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக காலம் கழிப்பதை சில தமிழ் ஹீரோயின்கள் பேஷனாக வைத்துள்ளனர். அந்த வரிசையில் நடிகை சுருதிஹாசன், திரிஷா, அனுஷ்கா, போன்றோர் திருணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இப்போது அந்த வரிசையில் 34 வயது கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்துவருகிறார் நடிகை காஜல் அகர்வால், இவரது தங்கைக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது, ஆனால் காஜல் அகர்வால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கழித்து வருகிறார். அதே நேரத்தில் தனது உடற்கட்டை ஸ்லிம்மாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்வதில் அதீத ஆர்வம் செலுத்தி இளமையை மெயின்டெயின் செய்து வருகின்றார்.
இந்நிலையில் அவரது ரசிகர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று அன்பு தொல்லைகொடுத்து வருகின்றனர். இந் நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளகாஜல் அகர்வால், திருமண பந்தத்தின் மீது, எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது எனவே நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். விரைவில் திருமணத்தைப் பற்றி அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோல் பலமுறை அவர் தெரிவித்திருந்த நிலையிலும் திருமணத்தை தள்ளிபோட்டுக்கொண்டே இருக்கிறார், இந்த நிலையில் காஜல் அகர்வாலின் தீவிர ரசிகர் ஒருவர் நீங்கள் எது போன்ற மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டதுடன், என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்றும் கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சமும் டென்ஷனாகாத காஜல் அகர்வால் நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள் என்றதுட் ஆனால் அது அவ்வளவு எளிதில் நடக்கும் காரியமல்ல என்று ரசிகரை கலாய்த்துள்ளார்.
