சூரரை போற்று! படக்குழுவிற்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி!
பெண்களின் குத்து சண்டையை மையமாக வைத்து ‘இறுதி சுற்று’ படத்தை இயக்கிய, பெண் இயக்குனர் சுதா கொங்காரா இரண்டாவதாக இயக்கி வரும் திரைப்படம் ‘சூரரை போற்று’.
இந்த படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெரிப், கருணாஸ், மோகன் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சிக்கியா என்டர்டயன்மெண்ட் இணைந்து தயாரித்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில். தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது.
இதனை படக்குழுவினருடன் மிகவும் சந்தோஷமாக கொண்டாடி உள்ளார் நடிகர் சூர்யா. மேலும் இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் மற்றும் டெக்கினிசியன் அனைவருக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
படப்பிடிப்பின் கடைசி நாள் சூர்யா படக்குழுவினருடன் மிகவும் சந்தோஷமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.