சிவகார்த்திகேயன் பிரபல தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவுக்கு காமெடியனாக வந்து இப்பொழுது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். உச்ச நட்சத்திரத்திற்கு இணையாக காலை நான்கு மணி காட்சி போடும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
குறுகிய காலகட்டத்திலேயே ஏன் இந்த வளர்ச்சி? தமிழ் சினிமாவில் ஒரு சில நேரங்களில் சில அதிசயங்கள் நடப்பதும் உண்டு. ஆனால் இப்பொழுது அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள படாதபாடுபடுகிறார். பல வருடங்களாக போராடி கிடைத்த இடத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்.
ஒரு பக்கம் தொடர் தோல்விகள். தன் சொந்த தயாரிப்பு மூலம் ஏற்பட்ட நஷ்டங்கள், தனக்கு எதிராக கத்தி தீட்டும் பல நடிகர்கள் என பல சொல்லிக் கொண்டே போகலாம். ஒருவர் தோற்றுவிட்டால் அவரைப் பார்த்து சிரிக்கும் இந்த உலகம், ஒருவர் ஜெயித்து விட்டால் பொறாமைப்படும் இந்த உலகம்.
ஆம்! சிவகார்த்திகேயன் இன்று ஜெயிப்பதை பார்த்து சில நடிகர்கள் அவருக்கு எதிராக கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். தான் அறிமுகப்படுத்திய ஒருவர் தனக்கு எதிராக இருக்கிறார் என ஒருவரும், மற்றொரு நடிகர் பல வருடங்களாக உழைத்து கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்த பெயரை டக்கென வந்து பறித்து விட்டால் சும்மா இருப்பார்களா?
இதற்கு முன் சிவகார்த்திகேயன் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனால் இவருக்கு எதிராக கத்தி திட்டிய பல நடிகர்கள் ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து கொண்டாடினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இப்பொழுது ரிலீஸ் செய்யும் ஒரு படத்திற்கு சில நடிகர்கள் மறைமுகமாக தனது கத்தியை வீச தயாராக உள்ளனர். பார்ப்போம், இது அவர்மேல் படுமா? இல்லை வழுக்கி விழுமா? என்று..