Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

houdy-modi-indiastarsnow

இந்திய பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து…!!

Posted on September 25, 2019 By admin No Comments on இந்திய பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து…!!

பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு ஒன்று இந்திய பிரதமர் மோடியின் உயிருக்கு குறிவைத்துள்ளதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்தியாவின் ஆரக்காலையே அசைத்து பார்க்கும் அளவிற்கு சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, இந்தியாவை பழி தீர்க்க நேரம் பார்த்து

காத்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவது, தீவிரவாதிகளை நாட்டிற்குள் ஊடுருவ செய்வது என இந்தியாவை வம்பிழுக்கும் வேலைகளிலும் அது தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் அனைத்தையும் இந்தியா நிதானமாக கையாண்டு வருவது பாகிஸ்தானுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் இந்தியாவிற்கு எதிரான சதி திட்டம் தீட்டி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிரதமர் மோடிக்கு குறி வைத்திருப்பதாகவும், வெளிநாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. நாட்டின் பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரைக் குறிவைத்து பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்காக தற்கொலை படையைகளை தயார் செய்து வருவதாகவும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தனது கூட்டாளி அமைப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது பற்றி குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

ஓரிரு மாதங்களுக்குள் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு ஜெய்ஷ்-இ-முகமது திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அதன் துணை இயக்கங்களுடன் இணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பாக வட இந்தியாவில் அமிர்தசரஸ் பதான்கோட் லக்னோ ஜெய்ப்பூர் மற்றும் தென்னிந்தியாவில் தமிழ்நாடு பெங்களூர் ஆந்திர மாநிலம் இந்திய ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட இடங்கள் அவர்களின் டார்கெட் பட்டியலில் உள்ளதாகவும் உளவு அமைப்புகள் எச்சரிக்கின்றன.

Political News

Post navigation

Previous Post: மக்களவை தேர்தல் மாதிரி நினைக்காதீங்க…திமுகவிற்கு சவால் விடும் எடப்பாடி..!
Next Post: காமராஜர் – கருணாநிதி ரேஞ்சுக்கு விஜய்க்கு பில்ட் அப் கொடுக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Posts

Today Rasi-Palan-new-www.indiastarsnow.com திங்கட்கிழமை-இன்றைய ராசிபலன் Cinema News
தெலுங் கானா கவர்னர் சிறப்பாக செயல்படுவேன் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவியேற்பு தமிழிசை சவுந்தரராஜன் Political News
edappadi-k-palaniswami-and-o-panneerselvam-indiastarsnow.com அதிமுகவில் 16 மாவட்டச் செயலாளர்கள்?? Political News
ராகுல் காந்தி மீண்டும் தலைவரா-indiastarsnow.com ராகுல் காந்தி மீண்டும் தலைவரா? : காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது!! Political News
பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுரை!! Political News
food guide pyramid நம் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் !!! Education News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme