Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Jackie-Chan-pretended-to-be-hurt-to-be-close-to_indiastarsnow.com

என்டர் த ட்ராகன் படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில்

Posted on September 24, 2019September 24, 2019 By admin No Comments on என்டர் த ட்ராகன் படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில்

புரூஸ் லீயின் மகள் ஷானன் லீ, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து உள்ளார். லீயுடன் சண்டையிடுவதை ஜாக்கி காணக்கூடிய படத்தின் கிளிப்களும் வீடியோவில் உள்ளது. ஜாக்கிசான் 1970-களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றினார்.

புரூஸ் லீ நடிப்பில் 1973-ம் ஆண்டு வெளியான படம் ‘என்டர் தி ட்ராகன்’. உலகமெங்கும் பெரும் வெற்றியைக் குவித்த இந்தப் படத்தில் ஜாக்கி சான் ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். படத்தில் புரூஸ் லீ ஒரு அடியாள் கும்பலைத் தாக்குவது போன்ற ஒரு காட்சியில் புரூஸ் லீயிடம் அடிவாங்கும் அடியாட்களில் ஒருவராக ஜாக்கிசான் நடித்திருப்பார்.

அந்த வீடியோவில் ஜாக்கிசான் கூறியிருப்பதாவது:-Jackie-Chan-pretended-to-be-hurt-to-be-close-to_indiastarsnow.com

”என்டர் த ட்ராகன்’ படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் அடிவாங்க வேண்டும். எனக்குப் பின்னால் கேமரா இருந்தது. எனக்கு முன்னால் புரூஸ் லீ இருந்தார். நான் அவரை நோக்கி ஓடிச் சென்றேன். திடீரென எனது கண்கள் இருட்டிவிட்டன. அப்போது தான் அவர் ஒரு குச்சியை வைத்து என்னை அடித்ததை உணர்ந்தேன். எனக்கு மயக்கம் வந்துவிட்டது. நான் புரூஸ் லீயைப் பார்த்தேன். அவரோ இயக்குநர் கட் சொல்லும்வரை நடித்துக் கொண்டே இருந்தார்.

பின்னர் குச்சியைத் தூக்கி எறிந்து விட்டு என்னை நோக்கி ஓடி வந்து, என் தலையை தூக்கி ‘மன்னித்து விடு’ என்று கூறினார். எனக்கு வலி போய்விட்டது. நான் அப்போது இளைஞனாகவும் வலிமையாகவும் இருப்பேன். ஆனால் புரூஸ் லீ என்னைப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வலிப்பது போல நடித்தேன். அன்று முழுவதும் அப்படியே செய்து கொண்டிருந்தேன்”.

இவ்வாறு ஜாக்கி சான் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.jacke chan

‘என்டர் த ட்ராகன்’ வெளியாவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே புரூஸ் லீ இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:jacke chan, Jackie-Chan-pretended-to-be-hurt-to-be-close-to_indiastarsnow.com

Post navigation

Previous Post: வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறேன் சூரி
Next Post: கதாநாயகியாக எனது 13 வருட பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது தமன்னா

Related Posts

நள்ளிரவில் நிலா குளியல் போடும் புகைப்படம் ஒன்றை அமலா பால் வெளியிட்டுள்ளார் Cinema News
இபிகோ 306 நீட் தேர்வின் பின்னணியில் இபிகோ 306 நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் Cinema News
சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர் சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர் Cinema News
நடிகர் அயுப்கான் தெலுங்கானா ஆளுனர் திருமதி தமிழிசை சந்தித்தார் Cinema News
மலையாள சினிமாவைப் பின்பற்றுங்க..” தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கே.ராஜன் அறிவுரை மலையாள சினிமாவைப் பின்பற்றுங்க..” தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கே.ராஜன் அறிவுரை Cinema News
A R Entertainment upcoming project pooja-indiastarsnow.com A R Entertainment upcoming project pooja Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme