Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Actor Soori -indiastarsnow.com

வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறேன் சூரி

Posted on September 24, 2019September 24, 2019 By admin No Comments on வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறேன் சூரி

கதாநாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமனி, வடிவேல், விவேக், கருணாஸ், சின்னி ஜெயந்த், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு வரிசையில் இப்போது சூரியும் சேர்ந்து இருக்கிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரியை புரோட்டா காமெடி பிரபலமாக்கியது.
அதன்பிறகு காமெடி வேடங்கள் குவிந்தன. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து மளமளவென உயர்ந்தார். இப்போது புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். கதாநாயகன் ஆனது குறித்து சூரி அளித்த பேட்டி வருமாறு:-Actor Soori -indiastarsnow.comActor Soori -indiastarsnow.com

“நான் சினிமாவில் அறிமுகமான போது பெயின்டர் வேலை செய்து கொண்டு இருந்தேன். அதன்பிறகு பல படங்களில் சிறுசிறு வேடங்களில் வந்தேன். இதுவரை 60 படங்களில் நடித்து விட்டேன். 3, 4 வருடங்களாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. நான் ஏற்கவில்லை.

இப்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறேன். இந்த படத்தின் கதை இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒன்று. இந்த படம் பற்றி சிவகார்த்திகேயன் என்னிடம் விசாரித்தார். என் நலனில் அவருக்கு அக்கறை உண்டு. நானும் அவர் மீது அதிக பாசம் வைத்து இருக்கிறேன். நாங்கள் இருவரும் அண்ணன் தம்பியாக நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” இவ்வாறு நடிகர் சூரி கூறினார்.

Cinema News Tags:Actor Soori -indiastarsnow.com

Post navigation

Previous Post: நியூயார்க் நகரில் நாடாகும் ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்
Next Post: என்டர் த ட்ராகன் படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில்

Related Posts

Wake up surgery இந்தியாவில் முதன்முறையாக 93 வயதான நோயாளிக்கு அவேக் கரோடிட் எண்டார்டெரெக்டோமி செயல்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது Cinema News
சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும் மாநாடு சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும் மாநாடு Cinema News
இளம் வயது இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்ன் வெஸ்டர்ன் இளம் வயது இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்ன் வெஸ்டர்ன் Cinema News
Prime Video’s The Lord of the Rings Prime Video’s The Lord of the Rings Cinema News
சுருதிஹாசன் நிதானமான வாழ்க்கையை வாழ்கிறேன் சுருதிஹாசன் நிதானமான வாழ்க்கையை வாழ்கிறேன் Cinema News
காற்றுக்குள்ளே - சமூக அரசியல் பேசும் இளம் பட குழுவினர்கள்.. காற்றுக்குள்ளே – சமூக அரசியல் பேசும் இளம் பட குழுவினர்கள்.. Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme