சமீபத்தில் விஜய் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பற்றி பேசினார். அதில் குறிப்பாக பேனர் கலாச்சாரம், சமூக வலைதள சண்டை பற்றியும் அவர் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார்.
விஜய்யின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தற்போது விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபல இயக்குனர் ஆர்வி உதயகுமார் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசினார். இவர் எஜமான், சின்னகவுண்டர் போன்ற படங்களை இயக்கியவர்.
“பேசாத ஹீரோக்கள் எல்லாம் மேடையில் ஜாஸ்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ஒன்னும் புரியல.. ரொம்ப அமைதியா இருப்பாரேபா.. ஜாஸ்தி பேசுறாரே.. எதோ விஷயம் இருக்கிறதா? படத்திற்கு முதலில் டைட்டிலை தமிழ்ல வைங்கப்பா. (பிகில்) அதற்கு என்ன அர்த்தம் என்று பார்த்தேன். அது தமிழ் வார்த்தையே இல்லை என்று வருகிறது” என அவர் பிகில் பட பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.
தமிழனாக இருந்தால் தமிழில் டைட்டில் வையுங்க என இதே கருத்தை தயாரிப்பாளர் கே.ராஜன் மேடையில் பேசியுள்ளார்.