‘பிகில்’ திரைப்படம் வெளியாவதற்குள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இப்படம். அந்த வகையில், ட்விட்டரில் அதிக லைக்குகளை பெற்று ‘பிகில்’ பட போஸ்டர் சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
முன்பெல்லாம் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது தான், ஆர வாரம் செய்து கொண்டாடுவார்கள். ஆனால் இப்போதோ தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களின் போஸ்டர், ட்ரைலர், பாடல், லிரிகள் பாடல் என எது வந்தாலும் அதனை வைரலாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் ரசிகர்கள்.
அதிலும் தளபதி விஜய், தல அஜித், தலைவர் ரஜினி, உலகநாயகன் கமல் உள்ளிட்டோரின் படம் பற்றிய தகவல் வெளியானால் சொல்லவே வேண்டாம்.
அந்த வகையில், தற்போது விஜய் நடித்து முடித்துள்ள ‘பிகில்’ படத்தின் போஸ்டர் 200k லைக்குகளை பெற்று ட்விட்டரின் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் தமிழில் வெளியான எந்த படங்களின் போஸ்டர்களும் இந்த அளவிற்கு லைக்குகள் வந்ததில்லை. எனவே ட்விட்டர் வரலாற்றில், அதிக லைக்குகளை பெற்ற போஸ்டர் பிகில் படத்தின் போஸ்டராக உள்ளது.
இந்த தகவலை படக்குழு மட்டும் இன்றி, விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘பிகில்’ இசைவெளியீட்டு விழாவில் தளபதி விஜய், உணர்ச்சிவசத்தோடு ரசிகர்கள் மத்தியில் பேசியதே இன்னும் கோலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த சாதனையையும் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.