சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றை படைத்தார்.
இந்தநிலையில், தங்கம் வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்த பி.வி.சிந்துவின் பயிற்சியாளரான தென் கொரியா நாட்டை சேர்ந்த பயிற்சியாளர் கிம் ஜி ஹியன், தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கிம் ஜி ஹியனின் கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடன் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் இருப்பதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிம் ஜி ஹியன் ராஜினாமா செய்துள்ளதாகவும் இந்தியாவின் தலைமை தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் தெரிவித்துள்ளார்.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்துவை வெற்றிப்பெற செய்வதற்கு கிம் ஜி ஹியன் சிறப்பு பயிற்சி அளித்து வந்தநிலையில் பயிற்சியாளரின் ராஜினாமா வருத்தம் அளிப்பதாக பி.வி.சிந்து கூறியுள்ளார்.
பதவிக்காலம் முடியாமல் ராஜினாமா செய்த இந்தியாவின் மூன்றாவது வெளிநாட்டு பயிற்சியாளர் கிம் ஜி ஹியன் என்பது குறிப்பிடத்தக்கது.