பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தில் சொகுசு கார்கள் அதிகம் உள்ளன. மெர்சிடிஸ் மேபேக் s 500, லக்ஸஸ் lx570 போன்ற விலை உயர்ந்த கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக நின்றுகொண்டிருக்கும்.
இந்த சூழலில் அமிதாப் பச்சன் பயன்படுத்திய பென்ஸ் எஸ் கிளாஸ் 350 எல் கார் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த பென்ஸ் எஸ் கிளாஸ் 350 காரில் பயணம் செய்ய குடும்பத்தினரும் மிகவும் விரும்புவார்களாம். தற்போது இந்த வகையான கார் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமிதாப்பச்சன் அடுத்து புது ரக காரை வாங்குவதற்காக இந்த காரை விற்பதாக தெரியவருகிறது. மேலும் நடிகர்கள் அவ்வப்போது கார்களை மாற்றுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.