நாடோடிகள் 2 படத்தை பற்றிய அஞ்சலி கூறியதாவது:- “சமுத்திரக்கனி அண்ணன் எப்போதும் எனது குடும்பத்தில் ஒருவராக என் நலனில் அக்கறை கொள்வர். அதனால் இப்படத்தில் வாய்ப்பளித்த அவருக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது. ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது அதன் முதல் பாகத்தில் கதைக்களத்தை மோசம் செய்யாமல் இருக்க வேண்டும்.
நடப்பு விஷயங்களை சமூக அக்கறையோடு பிரதிபலிக்கும் படம். இப்படத்தில் எனது கேரக்டர் பெயர் “செங்கொடி”. இந்த படத்தில் நான் சண்டை எல்லாம் போட்டு இருக்கேன்”என்று புன்னகை மலர பேட்டி கொடுத்தார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நட்பை பற்றி எடுக்கப்பட்ட “நாடோடிகள்” திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
சமீபகாலமாக இரண்டாம் பாகமாக எடுக்கப்படும் திரைப்படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.