தளபதி விஜய்யின் பெயரை கேட்டாலே அவரது ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள். அவர் பேசினாலே அரசியல் ஆக்கிவிடுவார்கள். அவரது படங்களின் ரிலீஸின்போது தமிழகமே திருவிழாவைப் போல் காட்சியளிக்கும்.
தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் கூட நடந்த பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் கூட்டம், மாநாடு நடக்கும் இடத்தை போல் காட்சியளித்தது.
இந்நிலையில் அக்டோபர் மாதம் முழுவதும் தளபதி விஜய்யின் பிகில் படத்தின் அப்டேட், தளபதி-64 படத்தின் அப்டேட்டும் ஒருசேர வரவுள்ளன. ஒரு அப்டேட் வந்தாலே சோசியல் மீடியாக்கள் ஸ்தம்பித்துவிடும். இந்நிலையில் தொடர்ந்து வரவுள்ள அப்டேட்களால் சமூக வலைதளங்கள் என்ன ஆகப்போகிறது என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
என்னென்ன அப்டேட்கள்-னு பாக்கலாமா?
ஒட்டு மொத்த தமிழ் சினிமா வும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பிகில் படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரத்தில் வெளிவர உள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் இரண்டாம் வாரத்தில் தளபதி-64 படத்தின் மொத்த நடிகர், நடிகைகள் பட்டியல் வெளியாக உள்ளது.
அக்டோபர் மாத இறுதியில் தீபாவளிகொண்டாட்டமாக பிகில் படம் வெளிவர இருக்கிறது. பிகில் படத்தை விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரகுமான் இசையில் பிகில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது.