Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தலைவன் இருக்கிறான் படத்தில் தான் இருப்பதாக வதந்தி கிளப்பும் வைகைப்புயல் வடிவேலு

தலைவன் இருக்கிறான் படத்தில் தான் இருப்பதாக வதந்தி கிளப்பும் வைகைப்புயல் வடிவேலு

Posted on September 24, 2019 By admin No Comments on தலைவன் இருக்கிறான் படத்தில் தான் இருப்பதாக வதந்தி கிளப்பும் வைகைப்புயல் வடிவேலு

புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாக முடியாமல் வீட்டில் சுமார் மூன்று வருடங்களுக்கும் மேல் முகாமிட்டிருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தான் அடுத்து கமலின் ‘தலைவன் இருக்கிறான்’படத்தின் மூலம் அதிரடியாக ரீ எண்ட்ரி கொடுக்கவிருப்பதாக வதந்திகளைக் கிளப்பியுள்ளார்.
கடந்த இரு மாதங்களாகவே வடிவேலு விரைவில் புதிய படங்களில் நடிக்கப்போகிறார். அதோ வருகிறார், இதோ வருகிறார், வந்தே விட்டார் என்கிற ரேஞ்சுக்கு பில்ட் அப்கள். ஆனால் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயர்களோ,இயக்குநர் பெயர்களோ இல்லாமல் அவ்வாறு வெளிவந்த செய்திகளுக்குப் பின்னால் இருந்த சூத்ரதாரியே வடிவேல்தான் என்கிறார்கள்.

ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துடனான பிரச்சினை சுமுகமாக முடியாத நிலையிலும் அவர்களை எதிர்த்துக்கொண்டு யாராவது நம்மைக் கமிட் பண்ண மாட்டார்களா என்ற நப்பாசையில்தான் அச்செய்திகளை வடிவேலு கிளப்பி விடுகிறாராம். அந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக கமலின் ‘தலைவன் இருக்கிறான்’படத்தில் வடிவேலு அவருக்கு இணையான வேடத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி தீயாய்ப் பரவி வருகிறது. இந்தச் செய்தியில் உள்ள பெரிய காமெடி என்னவெனில் அப்படம் நடக்குமா என்பதே இதுவரை கமலுக்குத் தெரியாது. ‘இந்தியன் 2’நல்லபடியாக முடிந்தால் மட்டுமே ‘தலைவன் இருக்கிறான்’படத்தைத் தயாரிப்போம் என்று லைகா நிறுவனம் கறாராக அறிவித்துள்ளது. கமலே இல்லாத படத்தில் வடிவேலு இருக்கிறாராம். ஹைய்யோ ஹையோ…

Cinema News Tags:தலைவன் இருக்கிறான் படத்தில் தான் இருப்பதாக வதந்தி கிளப்பும் வைகைப்புயல் வடிவேலு

Post navigation

Previous Post: பிக்பாஸ் தர்ஷனை ராஜாவாக மாற்றி… மற்றவர்களை ஆட்டி படைக்கும் மஹத் – யாஷிகா..
Next Post: விஜய் ட்விட்டர் வரலாற்றில் இடம்பிடித்த பிகில்! கொண்டாடும் ரசிகர்கள்!

Related Posts

A.R. Rahman அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய பாடல் இன்று வெளியாக உள்ளது A.R. Rahman அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய பாடல் இன்று வெளியாக உள்ளது Cinema News
Prime Video’s The Lord of the Rings Prime Video’s The Lord of the Rings Cinema News
Amazon Prime Video celebrates release of Suzhal – The Vortex with a unique visual spectacle at Chetpet Lake in Chennai Amazon Prime Video celebrates release of Suzhal – The Vortex with a unique visual spectacle at Chetpet Lake in Chennai Cinema News
Director Ramgopal Varma-indiastarsnow.com Director Ramgopal Varma’s “Naked Nanga Nagnam” from Tomorrow Cinema News
நடிகை சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் கெஸ்ட் ; சாப்டர்-2! நடிகை சாக்ஷி அகர்வால்ன் கெஸ்ட் ; சாப்டர்-2! Cinema News
Kalyani Priyadarshan Latest pic-indiastarsnow.com தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷுக்கு டஃப் கொடுக்க வரும் வாரிசு நடிகை?? Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme