பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னர் நடிகர், இயக்குநர் சேரன் பதிவிட்டிருக்கும் முதல் ட்விட்டிற்கு ஆயிரக்கணக்கில் கமெண்டுகள் குவிந்து வருகின்றன. அதில் பெரும்பாலானோர் சேரனை பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியே அனுப்பியதன் மூலம் அவரது முதுகில் குத்திவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளனர்.
91 நாட்கள் வரை பிக்பாஸ் இல்லத்தில் தாக்குப்பிடித்த சேரன் கடந்தவார எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார். கவின் லாஸ்லியா காதல் விவகாரத்தில் கொஞ்சம் பழைய பஞ்சாங்கமாக நடந்துகொண்டது, மகள் என்று சொல்லிக்கொண்டே லாஸ்லியாவை உடல் ரீதியாக உறவாடிக்கொண்டிருந்தது தாண்டி சேரன் பெரிய விமர்சனங்களுக்கு ஆளாகவில்லை. கொஞ்சம் பெரிய மனுஷத்தனத்துடன் அவர் நடந்துகொண்டதாகவே பெரும்பாலானவர்கள் அவர் குறித்து கமெண்ட் அடித்து வந்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியே வந்த பின்னர் முதல் ட்விட்டாக,…தலைவணங்கி நிற்கிறேன்..
எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..
நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி…என்று பதிவிட்டிருக்கிறார்.
அந்த பதிவிற்குக் கீழே நிமிடத்துக்கு நிமிடம் கமெண்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. அதில் சுமார் பத்து சதவ்கிதம் பேர் மட்டுமே சேரனுக்கு எதிராகக் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அத்தனை பேரும் கவின்,லாஸ்லியா காதலுக்கு மரியாதை செய்பவர்கள் என்று தெரிகிறது. மீதி 90 சதவிகிதம் மக்கள் பிக்பாஸ் இல்லத்திலிருந்து சேரன் இப்போது வெளியேற்றப்பட்டதன் மூலம் பிக்பாஸ் அவரது முதுகில் குத்திவிட்டதாகவும், மிக விரைவில் அடுத்த படத்தை இயக்கும்படியும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.