கோவா:
நிர்வாண பார்ட்டி நடத்த போறாம்.. வாங்க.. வாங்க.. என்று கூவி அழைத்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டம், பாட்டம், கேளிக்கைக்கு பேர் போனது கோவா சுற்றுலா தளம். இது பார்ட்டி நகரம் என்று கூட அழைக்கப்படுகிறது.
“என்ஜாய்” என்ற பெயரில் நடக்கும் கூத்துகள் இங்கு எக்கச்சக்கம். அதனால்தான் எந்நேரமும் இங்கு கூட்டம் நிறைந்து வழிந்து கொண்டே இருக்கும். இருக்கிற கூத்து பத்தாது என்று ஒரு போஸ்டரை இங்கு வந்து ஒட்டி உள்ளனர். கோவாவின் வடக்கு பகுதியில் நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாகவும், 10-15 வெளிநாட்டு பெண்களுடன் 10-க்கும் மேற்பட்ட இந்திய பெண்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த பார்ட்டி எங்கே நடக்க போகிறது, எப்போது நடக்க போகிறது என்ற விவரமெல்லாம் அதில் இல்லை. “நிர்வாண பார்ட்டி” என்றதுமே இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் மிக வேகமாக வைரலாக தொடங்கியது.
இந்த பரபரப்பு போஸ்டர் விவகாரம், கோவா மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரதிமா வரை சென்றுவிட்டது. ”இந்த விவகாரத்தில், முதல்வர் உடனடியாக தலையிட்டு, கடும் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்,” என பிரதிமா வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகரும் “இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முதல்வரும், விடுத்தனர். இதன்பிறகு போலீசார் இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கி, போஸ்டர் வேலையை செய்தது யார் என்ற விசாரணையை கையில் எடுத்துள்ளனர். ஆண்கள், பெண்கள், ஆடைகளின்றி கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக, சமூக வலைதளங்களில் வெளியான போஸ்டர் விவகாரம் கோவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.