சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் விமர்சனங்களும் எதிர்மறையாகவே இருந்தது. இருப்பினும் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 7 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
மூன்று நாட்களின் முடிவில் மொத்த வசூல் உலகம் முழுவதும் 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இருப்பினும் பெரிய முதலீடு என்பதால் இனி வரும் நாட்களில் திரையரங்குகளில் படத்தின் நிலைகுறித்து வெற்றியா அல்லது தோல்வியா என அறிவிக்கப்படும்.
காப்பான் படத்தை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன், படத்தின் மீதான தனது கருத்தையும், படத்தின் மீது ஏற்பட்ட எதிர்மறையான விமர்சனங்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:- இப்போதெல்லாம் ரசிகர்கள் ஒரு படத்தை ரசிப்பதை தவிர விட்டுவிட்டு அதில் இருக்கும் குறைகளை கண்டறிவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்கள் எடுக்கும் திரைப்படத்தின் முயற்சிகளை பாராட்டுவதை விட்டுவிட்டு, அதில் குறை கண்டு, தங்களுடைய புத்திசாலித்தனத்தை காட்ட விரும்புகின்றனர்.
என்னுடைய பார்வையில் ஒரு படம் அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்த வேண்டும், அவ்வளவுதான்.! என்று கூறினார்.இவர் முன்னதாக சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.