இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ‘சீமராஜா’ படத்திற்கு பின் கிராமத்து கதை களத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘நம்ப வீட்டு பிள்ளை’. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்துள்ளார்.
செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது படு பயங்கரமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ரெமோ’ படம் தான் வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து வெளியான படங்கள் தோல்வியை தழுவியதால், கண்டிப்பாக இம்முரை வெற்றி படத்தை கொடுதே தீர வேண்டும், என முனைப்புடன் ‘மெரினா’ படத்திற்கு பின் ‘பாண்டிராஜுடன்’ கை கோர்த்துள்ளார் சிவா.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘வெளியாக உள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.