உதயநிதி ஸ்டாலின் இனி முழு நேர அரசியலில் மட்டுமே ஈடுபடுவார், சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு துக்கச் செய்தி. சினிமாவை விட்டு இப்போதைக்கு வெளியேறும் எண்ணம் இல்லை என்று அறிவித்திருக்கும் உதயநிதி ‘தடம்’இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
திமுகவில் இளைஞரணித் தலைவர் பதவி வழங்கப்பட்ட பிறகு சினிமாவில் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்த உதயநிதி ஏற்கனவே தொங்கலில் கிடக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’படத்துக்கும் மீண்டும் கால்ஷீட் தரவுள்ளார். அதுபோக பெண்டிங்கில் கிடக்கும் மு.மாறனின் ‘கண்ணை நம்பாதே’, கே.எஸ்.அதியமானின் ‘ஏஞ்சல்’படங்களையும் துவக்கும் திட்டமும் உதயநிதியிடம் உள்ளது.
இதில் மகிழ் திருமேனியின் புதிய படத்துக்கு மட்டும்தான் இன்னும் நடிகர்,நடிகைகள் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அது குறித்த டிஸ்கஷனில் கதாநாயகியின் பெயராக நிவேதா பெத்துராஜை மகிழ் திருமேனி சிபாரிசு செய்ய பதறிப்போன உதயநிதி,’அவங்க வேண்டவே வேண்டாம். வேணும்னா மேகா ஆகாஷைக் கமிட் பண்ணுங்க’என்று சொன்னாராம். கவுதம் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வில் அறிமுகமாகி அப்படம் இன்று வரை ரிலீஸாகாத நிலையிலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் மேகா ஆகாஷ்.