Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Bigil Audio Launch

விஜய்யின் ‘பிகில்’படம் தொடர்பான சர்ச்சைகள்

Posted on September 23, 2019September 23, 2019 By admin No Comments on விஜய்யின் ‘பிகில்’படம் தொடர்பான சர்ச்சைகள்

விஜய்யின் ‘பிகில்’படம் தொடர்பான சர்ச்சைகள் ஒவ்வொரு திசையாக கிளைவிட்டுப் படர்ந்துகொண்டிருக்கும் நிலையில், புதிய சர்ச்சை ஒன்று சன்.டி.வியின் ரூபத்தில் கிளம்பியுள்ளது. நிகழ்ச்சி நடந்து மூன்றே நாட்களில் சுடச்சுட அதை வெளியிட்ட சன் டி.வி., அதில் விஜய் பேசிய சில சென்சிடிவான விஷயங்களுக்கு கத்தரி போட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் செம காண்டாகியுள்ளனர்.

’பிகில்’ இசை விழா முடிந்த அடுத்த நாளே நடிகர் விஜய் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்தாலும் அவர் பேசி விட்டுச் சென்ற கருத்துக்களுக்கு அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ‘பிகில்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சன் தொலைக்காட்சி நடிகர் விஜய்யின் பேச்சை ஒளிபரப்பும்போது மறைந்த சுபஸ்ரீயின் பேனர் விவகாரத்தில் விஜய் பேசியதை அப்படியே வெட்டி எறிந்தது. அடுத்து ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் அட்டாக் பண்ணும் ‘யாரை எங்க வைக்கணுமோ’வில் பாதியை வெட்டி எறிந்தது.
இதை இன்று வலைதளங்களில் பரப்பி சன் டி.விக்கு எதிராகப் பொங்கிவரும் விஜய் ரசிகர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சமாச்சாரம் ஒன்றே ஒன்றுதான். ‘மெர்சல்’பட ரிலீஸ் சமயத்துல நடந்ததெல்லாம் மறந்துபோச்சா தம்பி? ‘பிகில்’பட ரிலீஸ் எங்க தயவு இல்லாம நடந்துடுமா?? என்று அதிமுக அமைச்சர்கள் வெளிப்படையாக மிரட்டியதை ஒட்டி படத்தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனாவும் நடிகர் விஜய்யும் இணைந்தே அந்த பகுதிகளை வெட்டும் முடிவை எடுத்திருக்கிறார்கள். பாவம் அவங்களுக்கு பசிக்கும் இல்லையா?Bigil Audio Launch

Cinema News Tags:Bigil Audio Launch, Bigil-indiastarsnow.com, vijay-bigil-www.indiastarsnow.com

Post navigation

Previous Post: காப்பான் குறித்து ஒரு இன்ஸ்பெக்டர்
Next Post: இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ

Related Posts

Actress Priya Bhavani Shankar on Pathu Thala Actress Priya Bhavani Shankar on Pathu Thala Cinema News
சோப் விளம்பரம் போல மதத்தை விளம்பரப்படுத்துகிறார்கள் சோப் விளம்பரம் போல மதத்தை விளம்பரப்படுத்துகிறார்கள் கொதித்த ஹெச்.ராஜா Cinema News
சிபி சத்யராஜ் நடிக்கும் புரடக்சன் நம்பர் 1 பட படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது சிபி சத்யராஜ் நடிக்கும் புரடக்சன் நம்பர் 1 பட படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது Cinema News
இயக்குநர் முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது!* Cinema News
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் – ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’ எனும் இணையத் தொடரின் பிரத்யேக காட்சி துணுக்குகள், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற SXSW வில் நடைபெற்ற சிறப்பு விழாவில் ப்ரைம் வீடியோ அறிமுகம் செய்தது. Cinema News
கடைசி விவசாயி’ பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ‘கடைசி விவசாயி’ பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme