ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஒரு நபர் வெளியேறுவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளில் ஒன்று. அதன்படி முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்கள் மற்றும் வயல் கார்டு போட்டியாளர்கள் உட்பட 10 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் என்றால் அது கவின், லாஸ்லியா, சேரன், முகேன், தர்ஷன், சாண்டி, ஷெரின் ஆகியோர் மட்டுமே. இவர்களில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்கிற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.
ஷெரின் மற்றும் சேரன் ஆகிய இருவரின் ஒருவர் இன்று வெளியேறுவர் என அனைவரும் எதிர்பார்த்தனர். இப்படி எதிர்பார்த்தவர்களின் கணிப்பு ஓரளவு உண்மை என்றபோதும், எதிர்பாராத ஒரு சம்பவமும் அரங்கேறி உள்ளது.
அதாவது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கமல் அனைவரிடமும் இருந்து சேரன் மற்றும் லாஸ்லியா என இருவரும் விடை பெற்று வருமாறு கூறுகிறார். இதை கேட்டு மற்ற பிரபலங்களுக்கு மட்டும் ஷாக் இல்லை ரசிகர்களுக்கும் தான்.
எனினும் பிக்பாஸ் லாஸ்லியாவை வெளியேற்றுவது போல் வெளியேற்றி மீண்டும் வீட்டிற்குள் அனுப்பவும் வாய்ப்புள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.