Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Super Duper Film Review

சூப்பர் டூப்பர் படத்தின் விமர்சனம்

Posted on September 23, 2019 By admin No Comments on சூப்பர் டூப்பர் படத்தின் விமர்சனம்

துருவா பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னுடைய மாமா ஷாராவுடன் இணைந்து நாயகி இந்துஜாவை கடத்துகிறார். ஆனால், தவறான பெண்ணை கடத்தியது பின்னர்தான் தெரிகிறது. அதேசமயம் இந்துஜாவுக்கு கொலை மிரட்டல் இருப்பதும் தெரியவருகிறது.

அதாவது, போலீஸ் அதிகாரியாக இருக்கும் இந்துஜாவின் தந்தையை போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஆதித்யா கொலை செய்து விடுகிறான். பல கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் அடங்கிய பை, இந்துஜாவிடம் இருப்பதாக அறிந்து அவருக்கு மிரட்டல் விடுக்கிறான்.

இந்துஜாவை துருவா கடத்தும்போது விட்டு வந்த காரில் போதை மருந்துகள் உள்ள பை இருக்கிறது. இந்த கார், காசிமேடு தாதாவாக இருக்கும் ஸ்ரீனியிடம் சிக்குகிறது. இந்த காரை எடுத்துவந்தால் பணம் தருவதாக துருவாவிடம் கூறுகிறார் இந்துஜா.
இறுதியில் காசிமேடு தாதா ஸ்ரீனியிடம் இருந்து அந்த காரை எடுத்தாரா துருவா? ஆதித்யாவிற்கு போதை மருந்து கிடைத்ததா? தந்தையை கொலை செய்த ஆதித்யாவை இந்துஜா பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் துருவா துறுதுறு இளைஞனாக வலம் வருகிறார். ஆக்‌ஷன், காதல் காட்சிகளில் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். நடனத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகி இந்துஜா, அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக ஜில் ஜில் ராணி பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறார்.

துருவாவின் மாமாவாகவும் போலீசாகவும் வரும் ஷாரா, ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். போதை மருந்து கடத்தல் தலைவனாக வரும் ஆதித்யா, வில்லனத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். பல இடங்களில் நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். காசிமேடு தாதாவாக வரும் ஸ்ரீனி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மாஸ் என்ட்ரியுடன் களமிறங்கும் இவர், நடனம், காமெடி என நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
ஆக்‌ஷன், திரில்லர், காமெடி பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.கே. அதை காமிக்ஸ் புத்தகம் ஸ்டைலில் வடிவில் கொடுத்திருப்பது சிறப்பு. ட்விஸ்ட்களில் வரும் பிளாஸ் பேக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், திரைக்கதையில் தெளிவு இல்லாதது போல் தோன்றுகிறது.

படத்திற்கு பெரிய பலம் தளபதி ரத்தினம் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு. ட்ரோன் ஷாட்கள், டோலி ஜூம்கள் காட்சிகள் சிறப்பு. திவாகரா தியாகராஜனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

Movie Reviews Tags:Super Duper Film Review, சூப்பர் டூப்பர் படத்தின் விமர்சனம்

Post navigation

Previous Post: உங்கள போடணும் சார் படத்தின் விமர்சனம்
Next Post: பெருநாளி திரை விமர்சனம்

Related Posts

kaathu vaakula rendu kadhal review அதிர்ஷ்டம் இல்லாத ஒருவனின் வாழ்வில் நுழையும் இரண்டு பெண்களின் கதைதான் காத்துவாக்குல ரெண்டு காதல் Cinema News
Raangi movie review ராங்கி விமர்சனம் Cinema News
லவ் டுடே’ திரைவிமர்சனம்! லவ் டுடே’ திரைவிமர்சனம்! Cinema News
எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம் எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம் Movie Reviews
Perunali Film Review பெருநாளி திரை விமர்சனம் Movie Reviews
’லத்தி’ திரைப்பட விமர்சனம் ’லத்தி’ திரைப்பட விமர்சனம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme