Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Kaappaan-Movie-Review-www.indiastarsnow .com

காப்பான் திரை விமர்சனம்

Posted on September 23, 2019September 23, 2019 By admin No Comments on காப்பான் திரை விமர்சனம்

நாட்டின் பிரதமராக மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரியாக சமுத்திரக்கனி இருக்கிறார். பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு சதி திட்டம் நடக்கின்றது. சூர்யாவும் சில நாசவேலைகளை செய்கிறார். இவை அனைத்தும் எதிரிகளின் சதி திட்டத்தில் இருந்து மோகன்லாலை காப்பாற்றுவதற்காக அவர் செய்கிறார். இதனால் மோகன்லால் சூர்யாவை பாராட்டி மிலிட்டரி இண்டலிஜன்ஸ் பிரிவிலிருந்து தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறார்.
ஒரு கட்டத்தில் மோகன்லாலை பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் அரசியல் சூழல் காரணமாக மோகன்லாலின் மகனான ஆர்யா பிரதமராக பதவியேற்கிறார். ஆர்யாவிற்கும் சூர்யா தான் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கிறார். ஆர்யாவையும் கொல்ல சதி வேலை நடக்கிறது. இறுதியில் மோகன்லாலை கொன்றது யார்? ஆர்யாவை கொல்ல துடிப்பது யார்? என்பதை பாதுகாப்பு அதிகாரியான சூர்யா எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.Kaappaan-Movie-Review-www.indiastarsnow .com
பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, விவசாயி என கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா. பாதுகாப்பு அதிகாரிக்கான தோற்றம், கம்பீர நடை, துறுதுறு பார்வை என நடிப்பில் மிளிர்கிறார். படத்தின் மிரட்டலான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வாவ் சொல்ல வைக்கிறார் சூர்யா, குறிப்பாக ரெயில் ஸ்டண்ட் காட்சி வேற லெவல்.

எந்த கதாப்பாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தும் மோகன் லால், இதில் பிரதமராக நடித்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவர் பேசும் தமிழ் வசனங்களில் மலையாள வாசனை கலந்திருந்தாலும், அவரின் வசனங்களுக்கு திரையரங்குகளில் கைத்தட்டல் அள்ளுகிறது.

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணாக வரும் சாயிஷா, அழகு பதுமையுடன் தோன்றி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மோகன் லாலின் மகனாக நடித்திருக்கும் ஆர்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கார்ப்பரேட் முதலாளியாக நடித்திருக்கும் பொம்மன் இரானி வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். சமுத்திரக்கனி, பிரேம், பூர்ணா, தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு துறையில் நடக்கும் அரசியலை தோலுரித்து காட்டும் இயக்குனர் கே.வி.ஆனந்த். இப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயத்திற்கு ஏற்படும் சிக்கல்களை திரைக்கதையில் சிறப்பாக கையாண்டுள்ளார். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் . ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு காட்சிகளை கச்சிதமாக படமாக்கியுள்ளார். ஆண்டனியின் படத்தொகுப்பு திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு உதவுகிறது.
Kaappaan-Movie-Review-www.indiastarsnow .com

Movie Reviews Tags:Kaappaan Film Review, Kaappaan-Movie-Review-www.indiastarsnow .com, காப்பான் திரை விமர்சனம்

Post navigation

Previous Post: ஒத்த செருப்பு சைஸ் 7 திரை விமர்சனம்
Next Post: இருட்டு ட்ரைலர் நொடிக்கு நொடி திகில்

Related Posts

பரிவர்த்தனை திரை விமர்சனம்!! பரிவர்த்தனை திரை விமர்சனம்!! Cinema News
கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம் கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம் Cinema News
puppy-movie-review-indiastarsnow.com puppy movie review Cinema News
ஆகஸ்டு 16 1947 விமர்சனம் ஆகஸ்டு 16 1947 விமர்சனம் Cinema News
கபடதாரி தரைவிமர்சனம் கபடதாரி தரைவிமர்சனம் Movie Reviews
’லத்தி’ திரைப்பட விமர்சனம் ’லத்தி’ திரைப்பட விமர்சனம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme