திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் மென்மையான காதல் வலியையும், பாடும் வாய்ப்புக்காக ஏங்கும் இளைஞர் பற்றிய உணர்ச்சி பூர்வமான கதையை, முகவரி படத்தின் மூலம், கூறிய இயக்குனர் துரையை இப்படம் வேறுவிதமான கோணத்தில் மக்களை பார்க்க வைக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது.
இந்த படத்தில் சுந்தர்.சி.க்கு ஜோடியாக வாஷி பர்விந்தர் என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். மேலும் தன்ஷிகா, யோகிபாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், சுதர்சன் படத் தொகுப்பு செய்துள்ளார். மேலும் இப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களை போல் இல்லாமல், ஹாலிவுட் படங்களுக்கு நிகரான சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள, ட்ரைலரின் ஒவ்வொரு காட்சியிலும் திகிலூட்டி உள்ளார் இயக்குனர் துரை.