Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து

Posted on September 13, 2019 By admin No Comments on பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து கொள்வது குறித்து தொடர்ந்து விமர்சிக்கப்பட்டும் அவர் தன்னைத் திருத்திக்கொள்வதாக இல்லை. போட்டியில் கலந்துகொண்ட ஃபாத்திமா பாபுவே நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் தனது பேட்டியில் அழுத்தமாக பதிவு செய்தார்….லியாவின் இரு கன்னங்களை சேரப்பா தடவிக்கொண்டு இருந்ததைக் குறிப்பிட்டு ‘சேரன் நீங்க அவளை மகளாகவே நினைத்தாலும் அதிகம் தொடுவது வேண்டாம் ‘ என்று. தற்போது லாஸ்லியாவின் நிஜ அப்பாவே நிகழ்ச்சிக்கு வந்துபோன பிறகு இன்னும் அதிகமான சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார் சேரன்.

சேரனின் அந்த அத்துமீறலான நடவடிக்கை குறித்து வலைதளங்களில் பல்லாயிரக்கணக்கான கண்டனப்பதிவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று எழுத்தாளர் அராத்துவின் இந்தப்பதிவு. பொதுநலன் கருதி சில வாசகங்கள் சென்ஸார் செய்யப்பட்டுள்ளன.

சேரன் நிஜ லாஸ்லியாவின் நிஜ அப்பா அம்மா எதிரே லாஸ்லியாவை அணைத்துக்கொண்டார். லாஸ்லியாவின் தோள் மீது கை போட்டு கைகளினூடாகவே படர்ந்து லாஸின் உள்ளங்கைக்குள் தன் கையை புதைத்து , அவரின் விரல்களை தனது விரல்களால் நிரடிக்கொண்டு இருந்தார். விஜய் டிவி இந்த காட்சிகளை க்ளோஸ் அப்பில் காட்டிக்கொண்டு இருந்தது. எந்த அளவு க்ளோஸ் அப் என்றால் , திரை முழுக்க இருவரது உள்ளங்கைகளும் விரல்களும் மட்டும் தான். சேரன் லாஸ்லியாவின் விரல்களை பிடித்து விட்டும் நிரடிக்கொண்டும் இருக்கிறார்.

ஒரு ரசனையான போர்னோகிராஃபி படத்தில்தான் இதைப்போன்ற காட்சிகளை வைப்பார்கள். ஹீரோ ஹீரோயினின் கைகளை தடவிக்கொண்டே போய் அவளின் விரல்களை பிடித்து சொடக்கெடுத்து உருவி விட்டுக்கொண்டு இருக்கையில் , அவள் …… ஆகி கண்கள் சொருக , இப்படி செய்து கொண்டிருப்பவனின்….சரி சரி வேண்டாம் விடுங்கள்.

என்ன எழவு கூத்து இது ? கண்றாவி ! உறவைக் காட்ட , பாசத்தைக் கொட்ட , உடல் விளையாட்டு தான் பிரதானமா ?சேரன் தன் மன சாட்சியைத் தொட்டு சொல்ல வேண்டும். தன் சொந்த மகளை இப்படி செய்திருக்கிறாரா ? லாஸ்லியாவை தந்தை என்ற போர்வையில் இறுக்கிக்கொண்டு தடவுகையில், மனதில் எந்த உணர்வும் இல்லாமல்தான் இருந்ததா ? பச்சையாக சொல்வதானால் , சேரனுக்கு ஏதும் உடல் சிக்கல் இல்லையெனில் ஒரு அன்பான அணைப்புக்கிற்கு நான் எதிரியல்ல. அது ஒரு நாகரீகம். பட்டும் படாமல் தோள்கள் மட்டும் ஒட்டி எடுக்கும்படிக்கு இருக்க வேண்டும்.

தெறிக்க , ஈருடல் ஓருயிர் போல இறுக்கி அணைக்கவும் , தடவவும் , சொடக்கெடுக்கவும் , எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கவும் , கண்ட இடங்களில் கையை விட்டு குடாயவும் காதலி , மனைவி , கள்ளக் காதலி என பல உறவுகள் இருக்கின்றனவே ! இல்லை , அப்படி ஏதும் இப்போதைக்கு இல்லை எனில் உத்தமம். அக்கா , தங்கச்சி , அம்மா , மகள் என்றெல்லாம் பாச தடவுதல் கேவலமானது.

இதைச்சொன்னால் என்னையே பர்வர்ட் என்பார்கள். லாஸ்லியா – நிஜ அப்பா அணைத்தலே கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. அப்பா – மகள் இடையே இவ்வளவு அணைப்புத் தேவையில்லை. அவரும் , லாஸ்லியா கைகளைக் கோர்த்துக்கொண்டார். என்ன சின்ன கையாக இருக்கிறதே என்றார். இதுவா சின்னக் கை என்று லாஸ்லியா கொஞ்சினார். இந்த விஷயத்தில் இதை நான் சேரன் போலத் தவறாகச் சொல்லவில்லை , தவிர்க்க வேண்டும் என்கிறேன்.

சுஜாதா எழுதியதா அல்லது ஏதேனும் திரைப்படத்தில் வந்ததா என்று மறந்து விட்டேன். அதில் ஒரு அப்பா பாசத்துடன் தன் மகளுக்கு எல்லாம் செய்து கொண்டிருப்பார். காதலன் காதலியின் அப்பாவிடம் கேட்பான் ……”எல்லாத்தையும் அவளுக்கு நீங்களே செஞ்சிட்டா ….நான் அவளுக்குச் செய்ய என்னதான் மிச்சம் இருக்கு ?” அதை மட்டும் தான் மிச்சம் வைப்பீர்களா மாடர்ன் அப்பாக்களே ?

Cinema News Tags:பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து

Post navigation

Previous Post: பிக்பாஸ் இல்லத்தில் காதலிப்பதில் எந்தத் தவறும் இல்லை??
Next Post: கவினின் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பிரபலம்…பிக்பாஸ் வின்னர்

Related Posts

Glorious Star Awards 2019 , Mr and Ms Star Icon of Tamil Nadu by White Shadow, held in the city Cinema News
ஆஹா தளத்தில் பேட்டைக்காளி வெளியாகி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இயக்குனர் ல.ராஜ்குமார் அறிக்கை ஆஹா தளத்தில் பேட்டைக்காளி வெளியாகி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இயக்குனர் ல.ராஜ்குமார் அறிக்கை Cinema News
‘குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடிகர் மணிகண்டன் வர்த்தக மதிப்புள்ள நட்சத்திரமாக உயர்வார் – இயக்குநர் பாலாஜி சக்திவேல் Cinema News
இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் 'தடை உடை' விரைவில் நிறைவடையவிருக்கும் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ படபிடிப்பு Cinema News
தி ஹாண்டட் ஹவுஸ் ரியா தி ஹாண்டட் ஹவுஸ் திகில் கதையின் நாயகனாக ஆர்.பாண்டியராஜன் நடிக்கும் Cinema News
Actor Atharvaa Murali starrer “Trigger” second look sparks off sensation Actor Atharvaa Murali starrer “Trigger” second look sparks off sensation Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme