என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே? ஆகவே கவினும் லாஸ்லியாவும்
’என்கிறார் பிரபல இயக்குநர் வசந்த பாலன்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,…கேரளா பிக்பாஸ் சீசன் 1’ தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி Pearle Maaney மற்றும் சின்னத்திரை நடிகர் Srinish Aravind கலந்து கொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள்.நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள்.அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய,கொண்டாடிய தருணங்களை பார்கையில்,எந்த திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதல்.
ஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லாஸ்லியா,கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே “லாஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க?…கேமை கவனித்து விளையாடுங்க” என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது.முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.