Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகர் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்

நடிகர் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்

Posted on September 13, 2019 By admin No Comments on நடிகர் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ்.என்.ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.

இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை, 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.

ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.
இப்படத்தில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது.

இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Cinema News Tags:நடிகர் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்

Post navigation

Previous Post: நடிகை நயன்தாராவுக்கு செம்ம டஃப் கொடுக்கும் உடுமலை கவுசல்யா
Next Post: கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் புதிய படப்பிடிப்பு கொடைக்கானலில் துவங்கி இருக்கிறது

Related Posts

kalaga thalaivan movie review in tamil கலகத் தலைவன் விமர்சனம் Cinema News
Zee Studios South is all set to gift fans ‘King of Kotha’ starring Dulquer Salmaan this Onam 2023. Cinema News
Cinema News
"மெமரீஸ்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! -indiastarsnow.com “மெமரீஸ்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! Cinema News
Rakul-Preet-Singh-indiastarsnow.com நடிகை ரகுல்பிரீத் சிங் சினிமா பட அதிபர்களுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்துள்ளார் Cinema News
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' தொடரின் பிரத்யேக காட்சி இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் பிரத்யேக காட்சி Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme