Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

bigg boss 3 kavin-indiastarsnow

கவினின் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பிரபலம்…பிக்பாஸ் வின்னர்

Posted on September 13, 2019September 13, 2019 By admin No Comments on கவினின் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பிரபலம்…பிக்பாஸ் வின்னர்

விஜய் டிவி நேற்று வெளியிட்ட புரோமோ ஒன்றில் கவினின் கன்னத்தில் பளார் என்று அறை விடும் நண்பர் ‘பிக்பாஸ்’ டைட்டிலை வின் பண்ணிட்டு ‘என்னை வேணும்னா நீ திருப்பி அறைஞ்சுக்கோ’என்று கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவால் கவின் தான் வின்னரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

“பிக் பாஸ் 3’நிகழ்ச்சிகளைப் பார்க்கத்தூண்டும் வகையில் விஜய் நாள்தோறும் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் இந்த வீடியோவில் கவினின் நண்பர் அவரது கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை விடுவது சஸ்பென்ஸ் வைக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ளது. bigg boss 3 kavin-indiastarsnow

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இன்று 82 வது நாளை அடைந்துள்ளது. பிக் வீட்டில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. முகினின் அம்மா நிர்மலா மற்றும் தங்கை ஜனனி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து தொடர்ந்து லாஸ்லியாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அதேபோல் நேற்று வனிதாவின் மகள்கள், தர்ஷனின் குடும்பம், சேரனின் அம்மா, தங்கை, மகள் ஆகியோர் வந்திருந்தனர். இதில் லாஸ்லியாவின் குடும்பமும் சேரனின் குடும்பமும் நிகழ்ச்சியில் சோகத்தை பிழிய வனிதாவின் மகள்கள் நிகழ்ச்சியை கொஞ்சம் காமெடிகளால் ரிலாக்ஸ் செய்தனர்.

அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இன்றைய ப்ரோமோ வீடியோவில்,…, பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள கவினின் நண்பரும் நடிகருமான பிரதீப் ஆண்டனி கவினிடம், ’எனக்கு கடமை பாக்கி இருக்கு. நான் கெளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சினு நினைக்குறேன். நீ இவ்வளவு கேவலமா ஆடுன கேமுக்கு, நீ மட்டமா ஒரு விஷயம் பண்ணதுக்கு, உன்ன நம்புனவங்கள நீ கைவிட்டதுக்கு, இங்க இருக்குற எல்லாரையும் ஹர்ட் பண்ணதுக்கு இப்போ நான் உன்ன செய்யலாம்ன்னு இருக்கேன். டைட்டில் ஜெயிச்சிட்டு நீ பெரிய ஆளா ஆகிட்டன்னா என்ன ஸ்டேஜ்ல கூப்பிட்டு திருப்பி அடிச்சிக்கோ’ என்று சொல்லி பளார் என்று கவினின் கன்னத்தில் அறைகிறார். இதைக் கண்டு லாஸ்லியா உள்ளிட்ட மொத்த பிக் பாஸ் வீடும் அதிர்ச்சியில் உறைகிறது. இந்த அறை கொடுத்தவர் கவின் பிக்பாஸ் டைட்டிலை வென்றவுடன் திரும்பவும் பிக்பாஸ் இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டு கவினிடம் பதிலுக்கு அறை வாங்குவார் என்று தெரிகிறது.

Cinema News Tags:bigg boss 3 kavin-indiastarsnow.com, கவினின் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பிரபலம்...பிக்பாஸ் வின்னர்

Post navigation

Previous Post: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகள் என்ற உறவைச் சொல்லிக்கொண்டு இயக்குநர் சேரன் லாஸ்லியாவிடம் அத்துமீறி நடந்து
Next Post: தல 60’பட ட்ரெயிலரை வெளியிட்ட அஜீத் வெறியர்…வீடியோ

Related Posts

பரோல் திரை விமர்சனம் பரோல் திரை விமர்சனம் Cinema News
‘பனாரஸ்’ ஒரு வித்தியாசமான டைம் லைன் காதல் கதை Cinema News
நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம் நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம் Cinema News
Mohanlal Sir's performance in Company all over again – Vivek Anand Oberoi ‘Dharavi Bank’, I went back to Mohanlal Sir’s performance in Company all over again – Vivek Anand Oberoi Cinema News
பனாரஸ் திரை விமர்சனம்! பனாரஸ் திரை விமர்சனம்! Cinema News
கட்சிக்காரன்’ திரைப்பட விமர்சனம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme