Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இந்தியன் 2 அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது

இந்தியன் 2 அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது

Posted on September 13, 2019 By admin No Comments on இந்தியன் 2 அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றும் இந்த படம், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என தெரிகிறது. சித்தார்த் – ரகுல் ப்ரீத்சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள், இந்தியன் தாத்தா பங்குபெற்ற சண்டைக்காட்சி ஆகியவை முதல் கட்டப் படப்பிடிப்பில் படமாக்கப்பட்டுள்ளன.

சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த சண்டைக்காட்சியை வடிவமைத்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது. ‘பிக் பாஸ் 2’ மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையேயும் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காக நேரம் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

Cinema News Tags:Indian-2-movie-shooting-in-andhra_indiastarsnow, இந்தியன் 2 அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது

Post navigation

Previous Post: ஆண்மை தவறேல் படத்தில் 15 டேக்குகளுக்கு மேல் போனது முத்த காட்சி
Next Post: அருண் விஜய்க்கு ஜோடியான பல்லக் லால்வானி நடிக்கிறார்

Related Posts

ருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜர் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜர் Cinema News
Prime Video Debuts Exclusive Clip for Landmark Spy Series Citadel During Priyanka Chopra Jonas SXSW Keynote* Cinema News
ஆர். மாதவனின் இயக்குனராக உருவெடுத்துள்ள ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது ஆர். மாதவனின் இயக்குனராக உருவெடுத்துள்ள ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது Cinema News
யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படம் ” சைத்ரா Cinema News
*Manoj Bharathiraja to direct Bharathiraja for a film to be produced by Director Suseeenthiran* Cinema News
Super Good Films RB Choudary presents A Santhosh Rajan Directorial Jiiva starrer “Varalaru Mukkiyam” Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme