அருண் விஜய்யுடன் க்ரைம் திரில்லர் படத்தில் களமிறங்குகிறார். இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். இவர் இதற்கு முன் குப்பத்து ராஜா, சிக்ஸர் படத்தில் நடித்துள்ளார். நடப்பு சூழலில் உள்ள சமூக அவலத்தின் ஒரு பகுதியை மையமாக கொண்டு தீவிரமாக அலசும் ஒரு திரில்லர் படமாக உருவாக்க இருக்கிறார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். நெஞ்சமுண்டு நேர்மயுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.