முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 40 ஆண்டுகளாக எந்த முதலமைச்சரும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழக அரசை பாராட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை.
அதிமுக ஆட்சியை விமர்சிக்க திமுகவுக்கு தகுதியில்லை. யாரோ ஒருவர் எழுதி கொடுப்பதை பேசும் ஸ்டாலினுக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை. திமுக ஆட்சியில் தொழில் முதலீடு ரூ.26 ஆயிரம் கோடி தான். அதிமுக ஆட்சியில் ரூ.53 ஆயிரம் கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளனரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது? எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன? என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
