மத்திய அரசு கொண்டுவந்த திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாள்ர்களிடம் பேசிய அவர், ”திருத்தியமைக்கப்பட்ட வாகனச்சட்டத்தை நடைமுறை படுத்தினால் பொதுமக்களின் மீது அதிக சுமையை வைப்பது போல் ஆகிவிடும் என்றும் அதனால் இதை இங்கு செயல்படுத்தமாட்டோம் என்றும் மம்தா தெரிவித்தார்.
மேலும் மக்களை கஷ்டப்படுத்தும் எந்த சட்டத்தையும் மாநிலங்கள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது என்றும் மம்தா திட்டவட்டமாக தெரிவித்தார்.
திருத்தியமைக்கப்பட்ட அபராதங்களை அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி இதனைத் தெரிவித்துள்ளார்
