Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Hide gvprakash upcoming movie-www.indiastarsnow

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்

Posted on September 12, 2019September 12, 2019 By admin No Comments on பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.
Hide gvprakash upcoming movie-www.indiastarsnow

இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை , 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.Hide gvprakash upcoming movie-www.indiastarsnow

ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.Hide gvprakash upcoming movie-www.indiastarsnow

இப்படத்தில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது. இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று (12.9.2019) ஏ.வி.எம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
gvprakash upcoming movie-www.indiastarsnow.comgvprakash upcoming movie-www.indiastarsnow.com

Cinema News Tags:@actorguna, @elayaraj4u, @mathimaaran, @Rajarajan7215, @VarshaBollamma, @vishnu_rangsamy, #KProduction, gvprakash, gvprakash upcoming movie-www.indiastarsnow.com, Hide gvprakash upcoming movie-www.indiastarsnow

Post navigation

Previous Post: மஞ்சள் காமாலை & Hepatitis B நோய் தீர்க்கும் மருந்து
Next Post: உதயநிதியே நேரடியாக ஆய்வு??

Related Posts

*பிரைம் வீடியோ தனது ‘மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’இன் புதிய அமர்வை வெளியிடுகிறது Cinema News
‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்* – *ஐஸ்வர்யா ராஜேஷ் Cinema News
லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர் 25 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கிறது லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர் 25 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கிறது Cinema News
மாஸ் காட்டிய ஓவியா! அலைக்கடலாய் திரண்ட ரசிகர்கள்! மாஸ் காட்டிய ஓவியா! அலைக்கடலாய் திரண்ட ரசிகர்கள்! Cinema News
Disney India releases ‘The Little Mermaid’ on 26th May 2023. Only in cinemas. Cinema News
Vels University (VISTAS) offers various scholarships schemes வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் தகுதியான மாணவர்களின் நலனுக்காக பல்வேறு உதவித்தொகை Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme