கனடாவை சேர்ந்த பியான்கா ஆண்ட்ரெஸ்கு கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க ஓப்பன் அரையிறுதிக்கு தகுதி பெறும் 20 வயதுக்கு உட்பட்ட வீராங்கனை என்ற பெருமையை பெறுகிறார். 19 வயதான இவர் பென்சிச்சுடனான காலுறுதியில் 3-6, 6-2, 6-3 என வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், இது நிஜமா என நம்ப முடியாத அளவுக்கு பேச்சற்று நின்றதாகவும் தெரிவித்தார். இவர் அரையிறுதியில் மெர்டன்ஸை எதிர்கொள்கிறார்.
செரினா வில்லியம்ஸ் 24வது க்ராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உக்ரைன் வீராங்கனையை மற்றொரு அரையிறுதியில் எதிர்கொள்கிறார்.
ஆண்ட்ரெஸ்கு, இந்தியன் வெல்ஸ் மற்றும் டொர்னான்டோ போட்டிகளில் பட்டம் வென்றவர். 2009ம் ஆண்டு கரோலின் தகுதி பெற்ற பின்பு அரையிறுதிக்கு தகுதி பெறும் டீன் ஏஜ் வீராங்கனை ஆண்ட்ரெஸ்கு.
முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரண்டு செட்களையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சென்ற வருடம் முக்கிய போட்டிகளில் ஆடிய அனுபவம் கைகொடுத்தது என்றார்.
இவர் பட்டம் வென்றால் 2006 மரிய ஷரபோவாவின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இளம் வயதில் அமெரிக்க ஓப்பன் பட்டம் வென்றவர் என்ற பெருமையையும் பெறுவார்.