இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள், போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வருகை அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் இன்று மட்டும் தர்ஷனின் அம்மா, தங்கை ஆகியோர் உள்ளே வந்த காட்சி முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டது.
இதை தொடர்த்து வனிதாவின் மகள்கள் உள்ளே வந்து, பிக்பாஸ் வீட்டையே மிகவும் கலகலப்பாக மாற்றிய காட்சிகள் இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், சேரனின் மகள், மற்றும் உறவினர்கள் உள்ளே வந்திருக்கும் காட்சியும். சேரனின் மகள், அவருடன் பேசும் காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், சேரனின் மகள் லாஸ்லியாவுடன் நீங்கள் மிகவும் பாசமாக பேசுகிறீர்கள். ஆனால், அவள் உங்களை விட்டு கொடுத்து தான் பேசுகிறார். அந்த உறவுக்கு என்ன மரியாதை உள்ளது. எனவே நீங்கள், இனி நீங்கள் லாஸ்லியாவிடம் பேசினால் நான் உங்களிடம் பேச மாட்டேன் என ஒரே போடாய் போட அதிர்ந்து போய் நிற்கிறார் சேரன்.
பிக்பாஸ் வீட்டில், அவரவர் உறவினர்கள் உள்ளே வந்து போட்டியாளர்கள் மனநிலையை மாற்றிவிட, வரும் வாரத்தில் எதிர்பார்த்ததை விட, மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது இந்த போட்டி.