Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகை அசின்மகள் அரின் ஓணம் உடை உடுத்தி மகிழ்ந்ததார்

நடிகை அசின் மகள் அரின் ஓணம் உடை உடுத்தி மகிழ்ந்ததார்

Posted on September 12, 2019September 12, 2019 By admin No Comments on நடிகை அசின் மகள் அரின் ஓணம் உடை உடுத்தி மகிழ்ந்ததார்

நடிகை அசின், தனது பத்துமாத மகள் அரின் மற்றும் கணவருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிவருகின்றன. அப்படங்களை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். தனது பூர்விகமான கேரளாவின் பாரம்பர்யத்தை மறக்காமல் மகளுக்கு ஓணம் பண்டிகை உடை உடுத்தி மகிழ்ந்ததை வலைதளவாசிகள் பாராட்டி மகிழ்கின்றனர்.

தமிழில், ’உள்ளம் கேட்குமே’, ’எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ’கஜினி’, ’மஜா, ’சிவகாசி, காவலன்’ உட்பட பல படங்களில் நடித்தவர் அசின். விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்த இவர்,கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். ஆமிர்கானுடன் இந்தப் படத்தில் நடித்த அசினுக்கு இந்தி வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தன. சல்மான் கான், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன் உட்பட முன்னணி இந்தி ஹீரோக்களுடன் அங்கும் நடித்து வந்தார்.அக்‌ஷய் குமாருடன் ஹவுஸ்புல் 2’ படத்தில் நடித்தபோது, அக்‌ஷயின் நண்பரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மாவுடன் அசினுக்கு நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறியதையடுத்து இவரும் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின் அசின் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அரின் என்று பெயரிட்டிருந்தனர்.

Cinema News Tags:நடிகை அசின்

Post navigation

Previous Post: பிக்பாஸ் வீட்டில் சேரனை கண்டித்த மகன்!!!
Next Post: மேயாத மான் மெர்க்குரி படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்

Related Posts

விக்ரமின் 60 ஆவது திரைபடமான –‘மகான் விக்ரமின் 60 ஆவது திரைபடமான மகான் Cinema News
நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14 நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14 Cinema News
சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தில் இணையும் மற்றொரு பாடல் ❗ Cinema News
Team PS1 has been nominated in 6 categories at the Asian Film Awards Cinema News
அதர்வா முரளி நடித்துள்ள ட்ரிகர் படத்தின் செகண்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்றூள்ளது ! அதர்வா முரளி நடித்துள்ள “ட்ரிகர்” படத்தின் செகண்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்றூள்ளது ! Cinema News
தொல்லியல் நிபுணர் பத்ம விபூஷண் விருது பெற்ற திரு பீபி லால் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது தொல்லியல் நிபுணர் பத்ம விபூஷண் விருது பெற்ற திரு பீபி லால் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme