நடிகர் விஜய் சேதுபதி. இவர் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்று பிக் பாஸ் 2 டைட்டில் வின்னரான ரித்விகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரித்விகா, பா.ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் தொடர்ந்து பா. ரஞ்சித் படங்களில் அவரை பார்க்க முடிந்தது. மேலும் கபாலி, ஒருநாள் கூத்து போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது மனதிலும் இடம்பிடித்தார்.
தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகர் என்று பெயர் பெற்றவர், நடிகர் விஜய் சேதுபதி. இவர் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்று பிக் பாஸ் 2 டைட்டில் வின்னரான ரித்விகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரித்விகா, பா.ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் தொடர்ந்து பா. ரஞ்சித் படங்களில் அவரை பார்க்க முடிந்தது. மேலும் கபாலி, ஒருநாள் கூத்து போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது மனதிலும் இடம்பிடித்தார்.
மேலும் பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மேலும் பட வாய்ப்புகள் அதிகமாகவே வந்தன.இந்நிலையில் புதுமுக இயக்குனர் ரகுநந்தன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் ரித்விகா நடிக்க இருக்கிறார்.
ரித்விகா தற்போது பா ரஞ்சித் தயாரிப்பில் இரண்டாம் உலகப்போரின் அணுகுண்டு என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லரிலேயே இவரின் வித்தியாசத்தை காண முடிந்தது இவரின் சிறப்பம்சமாகும்.