தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் நடிகர் விஜய்யின் ‘பிகில்’படத்துடன் கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’படம் மோதுவதே பெரிய செய்தி என்னும் நிலையில், அப்படத்தின் இயக்குநர்தான் விஜய் படத்தின் அடுத்த இயக்குநர் என்பதால், அந்த மோதலைத் தடுத்திருக்க முடியாத என்ற விவாதங்களும் சூடுபிடித்துக்கொண்டிருக்கின்றன.
தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் விஜயின் ‘பிகில்’பட ஆடியோ வெளியீடு வரும் 19.09.2019 அன்று நடைபெற உள்ள நிலையில் அப்படத்துடன் போட்டியிட இருக்கும் கைதி படமும் ஹாட்டான டாபிக் ஆகியுள்ளது. இப்படத்தை இயக்கியிருப்பவர் ‘மாநகரம்’படத்தை இயக்கிய அடுத்த விஜய் படமான ‘தளபதி 64’படத்தை இயக்கவிருக்கிற லோகேஷ் கனகராஜ். இதே நாளில் ரிலீஸாவதாக இருந்த விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ தீபாவளி ரேஸிலிருந்து திடீரென்று ஒதுங்கிக் கொண்டதுபோல் ‘கைதி’படமும் கொஞ்சம் முன்னப்பின்ன வந்திருக்கலாமோ? அதுவும் அடுத்த பட வாய்ப்பு தந்த விஜய் படத்துடன் மோதலாமா?? ஒரு வேளை ‘கைதி’ வென்று ‘பிகில்’தோற்றால் தளபதி ரசிகர்கள் எரிச்சலுக்கு ஆளாக மாட்டார்களா??? போன்ற கேள்விகளெல்லாம் கியூ கட்டி நிற்க தற்போது தன் தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறார் லோகேஷ்.
அது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ள அவர்…‘கைதி’ படத்தை ஆகஸ்ட் மாதம் தான் வெளியிட இருந்ததாகவும் . ஆனால், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் முடியாததால், படம் முடிய தாமதம் ஆகிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை வாங்கியவர்கள் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய விரும்பியதால், தமிழிலும் தீபாவளீக்கு ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாம். இதனால் தான் ‘கைதி’ தீபாவளிக்கு வெளியாகிறது, என்று கூறிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒரு படத்தை முடித்துக் கொடுப்பது தான் இயக்குநரின் வேலை. அதை எப்போது ரிலீஸ் செய்வது என்ற முடிவை தயாரிப்பாளர் மட்டுமே எடுப்பார், அந்த வகையில் கைதி ரிலீஸுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்றும் கூறியிருக்கிறார்.