மின்துறை அமைச்சர் இது குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தாலும் மின் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்றார். மின் வாரியத்தின் நிதிப்பற்றாக்குறை குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்
.
மேலும் புதிய மின் இணைப்பிற்கு மட்டும் கட்டணங்கள் உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்ததாகவும் அதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
பொதுமக்கள் மீது நிதிச்சுமையை செலுத்த மாட்டோம் என்று தெரிவித்த அவர் இந்த ஆண்டு மட்டும் மின்வாரியம் 7 ஆயிரம் கோடி நிதிப்பற்றாக்குறையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.