குடற்புண் குணமாக அஷ்ட சூரணம்
சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
ஓமம் – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
சோம்பு – 50 கிராம்
இந்துப்பு – 50 கிராம்
பெருங்காயம் – 50 கிராம்
இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக, பிற சரக்குகள் அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்துக் கொள்ளவும். பின்னர் இவற்றைத் தூளாக்கி இந்துப்பு, பெருங்காயம் இவற்றையும் தூள்செய்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
பயன்கள்
குடற்புண், வாயுக்கோளாறுகள், பசியின்மை, செரியாமை ஆகியன தீரும். மூன்று வேளை உணவுக்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிடலாம் அல்லது இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய உணவுப் பொடியாகும். இது ‘அஷ்ட சூரணம்’ என்ற பெயரில் அனைத்து நாட்டு மருத்துக் கடைகளிலும் கிடைக்கிறது.