ஆர்எஸ்எஸ் பின்னணியா.. புதுமுகமா.. யார்தான் அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக?
சென்னை: இதோ, அதோ என்று சொல்லிய நிலையில், இன்னும் யாரையுமே தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்படவில்லை. இதில் மேலும் குழப்ப நிலையே நீடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்ததுமே, தமிழக பாஜக பரபரத்து காணப்பட்டது. புதிய தலைவராக இவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 6,7 முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் அடிபட்டன. அதுவும் ஓரிரு நாளிலேயே அறிவிக்கப்படும் என்றம் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நாள், ஆக ஆக இழுபறி நிலையே காணப்படுகிறது. இதற்கு காரணம், இந்த முறை புதுமுகத்துக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக தலைமை முடிவு செய்துள்ளதாக பரவிய செய்திதான்.
அதனால்தான் யார் எல்லாம் புதுமுகமோ, யாரெல்லாம் 40 வயசுக்கு குறைவாக உள்ளார்களோ, அவர்கள் எல்லாம் இந்த போட்டியை குறி வைத்துள்ளனர். இன்னொரு பக்கம் சீனியர்களும் லிஸ்ட்டில் உள்ளனர். ஒரு சிலர் டெல்லிக்கே போய் முகாமிட்டு பதவி கேட்டு நிர்வாகிகளைக்கு நெருக்கடி தந்து வருகிறார்களா.
இதனால்தான் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அதுமட்டுமில்லை.. புதியவர் என்று சொல்லிவிட்டதால் அனுபவம் இல்லாதவராகவும் இருந்துவிடக்கூடாது என்பதிலும் பாஜக தலைமை தெளிவாக உள்ளது. மற்றொரு பக்கம் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருக்கும் ஒருவரை தலைவராக கொண்டுவந்தால் தமக்கு எல்லா வகையிலும் சாதகமாக இருக்கும் என்றும் தலைமை யோசிக்கிறதாம்.
திமுகவில் 70 வயசு வரை இளைஞரணியில் இருக்கலாம்.. அன்பில் மகேஷுக்கு நறுக் பதில் அளித்த அமைச்சர்
யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவு செய்ய 7 பேர் கொண்ட கமிட்டி ஒன்றையும் அமைக்கலாமா என்ற ஐடியாவும் உள்ளதாம். ஆக மொத்தம்.. பாஜக தலைவர் இவர்தான் என்று சட்டுபுட்டுன்னு அறிவிக்க முடியாமல் தலைமை யோசனையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது.