. இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.
முந்தைய படங்களில் இருந்த இளநரை தலைமுடியையும் கருப்பாக்கி இருக்கிறார். அதிரடி சண்டை கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. படத்தில் கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் இடம் பெறும் என்று போனிகபூர் கூறியுள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது.
இந்த நிலையில் படத்தில் அஜித்குமார் தோற்றம் என்ற அறிவிப்போடு போலீஸ் அதிகாரி சீருடையில் அவர் பைக்கில் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைராகி வருகிறது. இதுதான் அஜித்குமாரின் வேடமா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. அது ரசிகர்கள் உருவாக்கிய புகைப்படம் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியதாகவும், அவருக்கு கால்ஷீட் இல்லை என்பதால் பிரபல இந்தி நடிகையை அணுகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் அஜித்குமார் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடிப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகியோரிடம் பேசி வருகிறார்கள்.