Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணன்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணன்

Posted on September 11, 2019September 11, 2019 By admin No Comments on பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணன்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணனுக்கு தமிழக அரசு கொடுத்த புதிய பதவி! அடித்தது அதிர்ஷ்டம்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி, தன்னுடைய உண்மையான குணத்தை வெளிக்காட்டி, ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், நல்ல விமர்சனங்களை பெற்றார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணன்
இவருக்கு அதிகமாகவே ஆதரவு இருந்தும் கல்லூரி காலங்களில் பேருந்தில் பயணிக்கும் போது, வேண்டுமென்றே சில பெண்களை உரசியதாக இவர் கூறிய வார்த்தை இவருக்கே, பாதகமாக அமைந்தது. அதனால் திடீரென ஏற்பட்ட பிரச்சனையால், சொல்லாமல் கொள்ளாமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் வெளியே வந்த ஒரு சில வாரங்களில், தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்தது. இந்நிலையில் இவருக்கு தமிழக அரசு முக்கிய பதவி ஒன்றையும் வழங்கியுள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் சிறந்த கருத்துள்ள படங்களை, தமிழக அரசு தேர்வு செய்து ரூபாய் 7 லட்சம் வரை மானியம் கொடுத்து வருகிறது.
இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டு, அதன் மூலம் தரமான படங்களை தமிழக அரசு தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த 2015 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் எடுக்கப்பட்ட குறைந்த பட்ஜெட், தரமான படங்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது நடிகர் சரவணனும் இணைந்துள்ளார்.

இந்த குழுவிற்கு ஓய்வு பெற்ற நீதிபதி குணசேகரன் என்பவர் தலைமை பொறுப்பு ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தக் குழுவில் இயக்குனர் ஆர்.வி உதயகுமார், நடிகர் சிங்கமுத்து, உள்ளிடோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:சரவணன், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணன்

Post navigation

Previous Post: பேரழகியாகக் காட்சி தரும் ’தல’ அஜீத் மகள்…கண்ணு வைக்கும் !!
Next Post: ஏ.ஆர்.ரகுமான் போட்ட வைரல் ட்விட்!

Related Posts

*Disney+ Hotstar announces its next web series with director M.Manikandan, starring Vijay Sethupathi* Cinema News
மாவீரன் திரை விமர்சனம் -indastarsnow.com மாவீரன் திரை விமர்சனம் Cinema News
Indian cinema stalwarts laud the trailer of Suzhal - The Vortex Dhanush to Vidya Balan and Samantha Prabhu, these celebrities are all praise for Amazon Prime Video’s Suzhal- The Vortex Cinema News
ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு Cinema News
Ram Charan's Rangasthalam breaks all records with its Japan Release- Nets 2.5 million yen in 70 screens on Day 1 ! Ram Charan’s Rangasthalam breaks all records with its Japan Release- Nets 2.5 million yen in 70 screens on Day 1 ! Cinema News
நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறக்கவுள்ளது Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme