தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பிகில்’, படத்தின் இசைவெளியீட்டு விழா, குறித்த தகவல் கடந்த ஓரிரு தினத்திற்கு முன் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
அதை தொடர்ந்து தற்போது ‘பிகில்’ படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய, பிரபல நிறுவனம் குறித்த சூப்பர் தகவல் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
பொதுவாக பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலே, அந்த படத்தின் உரிமையை கைப்பற்ற, பெரிய நிறுவனங்களுள் போட்டா… போட்டிகள் அதிகமாகவே இருக்கும். தளபதி விஜய்க்கு, தெலுங்கு திரையுலகத்தில், தமிழ் – மலையாளத்தை விட குறைவான ரசிகர்கள் கூட்டமே இருந்தாலும். ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
மெர்சல் திரைப்படம் தெலுங்கில் வெளியான போது, தெலுங்கு ரசிகர்கள் பிரமாண்ட கட்டவுட் வைத்து, படத்தை வரவேற்றனர். இதனால் ‘பிகில்’ படத்திற்கும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இப்படத்தின் தெலுங்கு உரிமையை, பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈஸ்ட் கோஸ்ட் புரோடக்சன்ஸ் சார்பில் மஹேஷ் எஸ்.கோனேரு கைப்பற்றி உள்ளதாகவும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிட முடிவு செய்துள்ளதாகவும் ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.