கர்நாடகாவின் ஹெ.டி.குமாரசாமியுடனான தனது திருமணம் குறித்த விஷயத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்தினார் ராதிகா. தங்களின் திருமணம் 2006-ல் நடந்தது எனவும் அதில் ராதிகா குறிப்பிட்டிருந்தார். ராதிகா – குமாரசாமி தம்பதிக்கு ஷாமிகா என்ற மகளும் உள்ளார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் குட்டி ராதிகா. இயக்குநர் நவரசன் இயக்கியுள்ள, ‘தமயந்தி’ என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் தற்போது அவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. அதோடு இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங்கும் செய்யப்படுகிறது.