ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய வாழ்த்துக்களை ஆங்கிலத்திலும் தெரிவித்துள்ளது மட்டும் இன்றி, மலையாளத்திலும் பதிவு செய்து தெரிவித்துள்ளார். இவரின் இந்த ட்விட்டருக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
மலையாள மொழி அறிந்த பிரபலங்கள் கூட , ஆங்கிலத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கும் நிலையில், இவர் மலையாளத்தில் தெரிவித்துள்ளது மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. இவரின் ஐடியா மற்றவர்களுக்கு தெரியவில்லை என கூட சில ரசிகர்கள் ட்விட் செய்து வருகிறார்கள்.
