இஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு
சந்திரயான் 2 விண்கலத்துடனான சிக்னலை திரும்ப பெறுவதற்கு இஸ்ரோவிற்கு உதவ தாங்கள் தயாராக உள்ளதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.
NASA வின் பாராட்டு மழையில் ISRO…
“விண்வெளி கடினமானது. குறிப்பாக நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயற்சி செய்துள்ளது NASA வை மிகவும் ஈர்த்துள்ளது. வரும் காலத்தில் ISRO உடன் இணைந்து NASA சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய ஆவலுடன் காத்திருக்கிறது”… என்று NASA விஞ்ஞானிகள் டிவிட்டரில் ISRO க்கு பாராட்டுக்கள் தெரிவித்து உள்ளனர்…
ஐக்கிய அரபு அமீரக விண்வெளி ஆய்வு மையம்
நிலவில் தரையிறங்கும் போது தொடர்பை இழந்த சந்திரயான் 2 உடனான தொடர்பை பெற இஸ்ரோவிற்கு எங்களின் முழு ஆதரவையும் தர தயாராக உள்ளோம். விண்வெளி ஆய்வு துறையில் இந்தியா ஒரு முக்கியமான அங்கம் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளுக்கு துணையாக இருப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு மையம்
நிலவில் தரையிறங்க சில கி.மீ., தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவின் இந்த முயற்சிகளை பாராட்டுகிறோம். தொடர்ந்து நாம் இணைந்தே விண்வெளி ஆய்வு தொடர்பான பயணத்தை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர்
விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் தரையிறங்க முயற்சி செய்துள்ளது மிக பெரிய சாதனை மிகவும் கடுமையானதும் கூட ,,,
நேபாள பிரதமர்
மோடியும் இஸ்ரோவும் சேர்ந்து வரும் காலங்களில் சந்திராயனை வெற்றி அடைய செய்வார்கள் ,,
ராஜபக்சே இலங்கை முன்னாள் அதிபர்
சந்திராயன் 2 தோல்வி அடைய வில்லை, இதுவே உலக நாடுகள் செய்யாத சாதனை.. இந்தியாவின் இந்த சாதனை எங்கள் ஆசிய கண்டத்திற்க்கே பெருமையாக கருதுகிறோம் ,,
அயல் நாட்டு பத்திரிக்கைகள்….அயல் நாட்டு விண்வெளி ஆய்வு இதழ்கள் என்ன சொல்கிறது…
1) வாஷிங்டன் போஸ்ட்….
ஏற்கனவே மூன்று நாடுகள் அமெரிக்கா , ரஷ்யா, சீனா 38 முறை சாப்ட் லேண்டிங் செய்ய முயற்சி செய்ததில் இதில் பாதிக்கும் மேல் தோல்வியை சந்தித்து உள்ளதை குறிப்பிட்டுள்ளது…
அமெரிக்கா 10 முறை, ரஷ்யா 7 முறை மற்றும் சீனா 5 முறை தோல்வியை சந்தித்து உள்ளது…
அதன் பிறகு தான் இந்த நாடுகள் வெற்றியை சந்தித்து உள்ளது…
நான்காவது நாடாக இந்தியா இந்த ஒரு முறை தோல்வியை சந்தித்து உள்ளதை குறிப்பிட்டுள்ளது…
2) அமெரிக்காவில் உள்ள Wired இதழில்.
லேண்டர் மட்டுமே தரையிறங்கவில்லை என்பதை குறிப்பிட்டு சந்திராயன் 2 முழுவதும் தோல்வி அடையவில்லை என்று எழுதியுள்ளனர்..
3) நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை…
இந்தியாவின் பொறியியல் சக்தியும் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சியும் சர்வதேச அளவில் குறிக்கோள் கொண்டு உள்ளது என்றும்… சந்திராயன் 2 மிஷன் ஒரு பகுதி லேண்டர் மட்டுமே தோல்வி அடைந்தது மற்றும் ஆர்பிட்டர் மூலம் ஆய்வு நடந்து வரும் என்று தெரிவித்துள்ளார்கள்…
4) பிரெஞ்ச் லீ மாண்டே….
சற்றே கற்பனை செய்து பாருங்கள்…
ஒரு விமானம் செல்லும் வேகத்தை விட
10 மடங்கு அதிக வேகத்தில் விண்வெளியில் விண்கலம் செல்கிறது.
அந்த வேகத்தில் ஒரு சில நிமிடங்களில் நேரடியாக மனித தலையீடு இல்லாமல் நிலவில் சாப்ட் லேண்டிங் செய்வது எப்படிப்பட்ட முக்கிய பணி என்பது என்று குறிப்பிட்டிள்ளது…
அயல் நாட்டு விண்வெளி ஆய்வு இதழ்கள்….
1) NASA Spaceflight ஆசிரியர் கிரிஷ் ஜி…
95% வெற்றியை ஆர்பிட்டர் ஆய்வு விண்கலம் தந்து உள்ளது… லேண்டர் தரையிறங்குவதில் தோல்வி அடைந்ததாலும் சந்திராயன் 2 மிஷன்
95% வெற்றியை பெற்று ஆர்பிட்டர் நிலவை சுற்றி ஆய்வு செய்து வருகிறது.
2) Planetary Society Senior Editor எமிலி லக்டவாலா….
அனைவரும் நினைவில் வையுங்கள், லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு இருந்தபோதிலும், இந்தியா இரண்டாவது முறையாக நிலவை சுற்றி ஆய்வு செய்யும் ஆர்பிட்டர் வெற்றிகரமாக இயங்கி வருகிறது…
2 வாரங்களுக்கு மட்டுமே ஆய்வு செய்யும் லேண்டர் தரையிறங்குவதில் தோல்வி அடைந்தாலும், 1 வருடம் ஆய்வு செய்யும் ஆர்பிட்டரை வெற்றிகரமாக இந்தியா செலுத்தி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்…
விஞ்ஞான ரீதியாக சந்திராயன் 2 மிஷன்
95% வெற்றியை சாதனை படைத்துள்ளது ISRO என்று உலக நாடுகள் இந்தியாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்….
அங்கு நம் நாட்டு ஊடகங்களை போல் தேச துரோக மற்றும் உண்மையை மறைக்கும் ஊடகங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது…