சைரா நரசிம்ம ரெட்டி படம் ஆங்கிலேயர்களை விரட்டியடித்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் கதையாகும். இப்படத்தில் சிரஞ்சீவி விஜய்சேதுபதி நயன்தாரா நடிக்கின்றனர்.
இப்படத்தை சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம் என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிடுவதற்கான வெளியீட்டு உரிமை விற்பனையாகி வருகிறது. ஹிந்தியை தவிர்த்து மற்ற மொழி வியாபாரத்தை phars films ரூ.18 கோடிக்கு MG முறையில் வாங்கியுள்ளனர்.