அக்கட தேசமான தெலுங்கில் ‘மெண்டல் மதிலோ, சித்ரலஹரி’ என இரண்டு படங்கள் நிவேதா பெத்துராஜுக்கு செம்ம ஹிட்டாய் அமைந்துள்ளனவாம். இதனால் தெலுங்கு ரசிகர்களுக்காக தன் கட்டுப்பாடுகளை, காஸ்ட்யூம்களை தளர்த்தி செம்ம ஹாட் விருந்து வைத்திருக்கிறது பொண்ணு.
சமீப காலமாக அக்கட தேசத்து இயக்குநர்களுக்கு தரவேண்டு நிவேதா எடுத்த ஹாட்டோ ஹாட்டு போட்டோக்கள், தமிழகத்தினுள்ளும் நுழைந்தன. அவற்றைப் பார்த்து அரண்டு மிரண்டு கிடக்கின்றது கோடம்பாக்கம்.
அதே நிவேதா தமிழ் சினிமாவில் புக் ஆகையில் மட்டும் கவர்ச்சிக்கு ‘நோ! நோன்னா நோதான்’ என்கிறாராம் தல ஸ்டைலில். இதனால் கடுப்பாகின்றனர் இயக்குநர்கள். அதேவேளையில் தெலுங்கில் அவர் தாராளமாய் இருப்பதுதான் அவர்களின் டென்ஷனை எகிற வைக்கிறது.
இதனால் கோடம்பாக்கத்துக்காக எப்போது தனது கட்டுப்பாட்டு கொள்கைகளை நிவேதா பெத்துராஜ் தகர்த்து எறிந்து, தடைதாண்டி வருவார்? என்று கண்களில் பூச்சி பறக்க காத்திருக்கின்றனர் தமிழ் சினிமா ரசிக புள்ளக்குட்டிகள்.