ராஜசேகர் சென்னை அடையாறு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு படித்தவர். கடந்த வியாழக்கிழமையன்று ராஜசேகருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைச்குச் செல்வதற்கு தேவையான பணம் அவர்களிடத்தில் இல்லை உன கூறப்படுகிறது.
உடனடியாக அவர் நடித்து வரும் சீரியல் ஒன்றின் இயக்குநர் விக்ரமாதித்யாவிடம் பண உதவி கேட்டுள்ளனர். அவர் ஒரு சில இடங்களில் ஏற்பாடு செய்து சனிக்கிழமை இரவு தான் அவரும் பணம் கொடுத்துள்ளார்.
அன்று இரவே அவர் போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பணம் கிடைக்கும் வரை ராஜசேகர் மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியைப் பொறுத்துக் கொண்டுதான் இருந்துள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜசேகர் மரணமடைந்தார். சிகிச்சைக்குப் பணம் கிடைக்காமல் ஒரு திரைத் துறையைச் சேர்ந்தவர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலருகே அமர்ந்து அழுதுகொண்டிருந்த போது கதறிஅழுபடி இதைத் தெரிவித்தபோது அனைவரம் அதிர்ச்சி அடைந்தனர்.
இதே போல் சிறுக சிறுக சேர்ந்து அண்மையில்தான் ராஜசேகர் ஒரு வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அந்த வீடு கிரஹப் பிரவேசம் நடைபெறுவதற்கு முன்பே அவர் இறந்துபோனதும் அவரது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது