அஜித், சமீபகாலமாக பெண்களின் சமூக நலன் கருதி வரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் அப்பா மகள் பாசத்தை வெளிப்படுத்தி மொத்த தமிழ்நாட்டின் தாய்மார்களையும் தன்வசப்படுத்தினார். மேலும் தனக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத நேர்கொண்ட பார்வை படத்தில், தனது படத்தில் வழக்கமாக வரும் மாஸ் காட்சிகள் முற்றிலும் இல்லாத அதேசமயம் வழக்கத்திற்கு மாறாக முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே சார்ந்த கதையில் கெஸ்ட் ரோல் போலவே நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.
உண்மையிலேயே அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் எதுவும் இல்லாமலேயே நேர்கொண்ட பார்வை பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி உள்ளது. சென்னை நகர் வசூல் 32 நாட்களில் ரூ. 10.79 கோடிகள் வசூல் செய்துள்ளது.
படத்திற்கு படம் தான் வசூல் கிங் என்பதை நிரூபணம் செய்து கொண்டே இருக்கிறார். இந்த வருடத்தில் மற்றொரு ரிலீஸான விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூலையும் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.